Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

துளசி விதை கலந்த வாழை பழச்சாறு விற்பனை தேசிய வாழை ஆராய்ச்சி மையம் ஏற்பாடு

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் உருவாக்கப்பட்டுள்ள துளசி விதைகள் அந்த தெளிவுப்படுத்தப்பட்ட வாழைச்சாறு தயாரிக்கும் தொழில்நுட்பம் தொட்டியம் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வாழை ஆராய்ச்சி மைய இயக்குனர் டாக்டர் உமா கூறுகையில்… தமிழகத்தில் ஒரு லட்சம் எக்டேரிலும், திருச்சி மாவட்டத்தில் 6 ஆயிரம் எக்டேர் பரப்பளவிலும் வாழை பயிரிடப்படுகிறது. வாழைப்பழம் போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்துதல் என்பது 20 முதல் 30 சதவீதம் வரை இழப்பு ஏற்படுகிறது. இதனால் விவசாயிகள் வியாபாரிகள் நுகர்வோர் கடும் பாதிப்பு உள்ளாகின்றனர்.

மேலும் ஒரு மாவட்டம் ஒரு பொருள் திட்டத்தின் கீழ் திருச்சியில் ஒரு பயிராக தேர்வு செய்யப்படுவதால் சந்தையை நிலைப்படுத்தவும், வீணாவதை தவிர்க்கவும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை வழங்க உதவும் இந்த புதிய தொழில்நுட்பம் பழுத்த வாழைப்பழத்தை துளசி விதைகள் கலந்த சாறாக மாற்றி விரைவில் சந்தைக்கு வருகிறது என்றார்.

இந்நிகழ்ச்சியில் தொழில்நுட்பத்தின் கண்டுபிடிப்பாளர்கள் ஒருவரான முதன்மை விஞ்ஞானி டாக்டர் சுரேஷ்குமார், தொழில்நுட்பத்தின் துணை கண்டுபிடிப்பாளர் டாக்டர் சிவா, தொட்டியம் உழவர் உற்பத்தியாளர் இயக்குனர் அஜீத்தன்,

தொழில்நுட்ப அலுவலர் காமராஜ், தொட்டியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் பொருளாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *