திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பிராட்டியூர் மற்றும் எடமலைப்பட்டி புதூர் பள்ளிகளில் ஒரிகாமி எனும் காகித மடிப்பு கலையை ஒரிகாமி கலைஞர் தியாக சேகர் அவர்கள் மாணவ, மாணவிகளிடம் செய்து காட்டி விளக்கம் அளித்தார்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பிராட்டியூர் மற்றும் எடமலைப்பட்டி புதூர்பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஒரிகாமி எனப்படும் காகித மடிப்பு கலை காகிதங்களை பயன்படுத்தி பசையின்றி காகிதச் சிற்பங்கள் உருவாக்கும் கலையை பல வடிவங்களாக விலங்குகள் ,மனிதர்கள், பறவைகள், உடைகள் மற்றும் எண்ணற்ற அலங்கார வடிவங்களாக நமது கற்பனையில் தோன்றும் எல்லா காகித வடிவங்களாக செய்து காட்டி விளக்கம் அளித்தார்.
காகிதத்தை மடித்து கப்பல் செய்வது மட்டும்தான் நம் அறிந்த கலை ஆனால் ஒருகாமி எனப்படும் ஜப்பானிய காகித சிற்ப கலையில் காகிதத்தை கொண்டு விலங்குகள் மனிதர்கள் பறவைகள் என நமது கற்பனையில் தோன்றும் எல்லாமே காகித வடிவமாக மாற்றுகின்றன.
இது வெறும் பொழுதுபோக்கு கலை இல்லை அறிவியல் தொழில்நுட்பம் கொண்ட உயர்ந்த கலை தமிழகத்தின் புகழ்பெற்ற ஒருகாமி கலைஞர் தியாகசேகர் தமிழக முழுவதும் கடந்த 15 ஆண்டுகளில் 400க்கும் மேற்பட்ட பள்ளிகளில் 3000 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு காகித மடிப்பு கலையை கொண்டு 500க்கும் மேற்பட்ட வடிவங்களை உருவாக்கி செய்து காட்டி விளக்கம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையர் க. பாலு, பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ,மாணவ, மாணவிகள் கலந்து கொண்டார்கள்.
Comments