Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

“2026 தேர்தலில் எடப்பாடியை வீழ்த்துவதே எங்கள் இலக்கு” – திருச்சியில் டிடிவி தினகரன் உறுதி

அ.ம.மு.க திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று திருச்சி மாவட்டம் காட்டூர் பகுதியில் நடைபெற்றது இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கலந்து கொண்டார் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

டி.டி.வி தினகரன் குறித்து முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் பேசியது குறித்த கேள்விக்குஆர்.பி.உதயகுமார் அவ்வாறு பேச மாட்டார். ஏதாவது AI வீடியோவாக இருக்கப்போகிறது. அவர் தவறாக கூற மாட்டார் என  டி.டி.வி தினகரன் கிண்டலடித்தார். செய்தியாளர்களை சந்திக்காமல்  வீரப்பன் ஸ்டைலில் வீடியோ வெளியிடுவது ஏன்?

வீடியோ வெளியிடுபவர்களுக்கு பதில் கூற வேண்டியதில்லை.

தற்போது அதிமுக இல்லை. எடப்பாடி பழனிச்சாமி திமுக தான் உள்ளது.

தினகரன் தனி நபராக
இருந்தாலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக வை ஆட்சிக்கு வர விடாமல் எடப்பாடி பழனிச்சாமி என்கிற துரோகத்தை தடுத்தோமோ அதே போல இந்த முறையும் எடப்பாடி பழனிச்சாமி என்கிற துரோகத்தை வீழ்த்தி எதிர்காலத்தில் அரசியலில் துரோகம் என்கிற வார்த்தையே இல்லாத அளவிற்கு பதிலடி கொடுப்போம்.

கடந்த தேர்தலில் துரோகத்தை வீழ்த்தும் போது திமுக ஆட்சிக்கு வந்தது. இந்த முறை அது போன்ற சூழல் வருமா என்பது தெரியாது. அ.ம.மு.க அங்கம் பெறும் கூட்டணி வெற்றி பெறும்.இந்த தேர்தலில் எனக்கு தெரிந்து நான்கு முனை போட்டி தான் இருக்கும்.

அதிமுக தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் ஆனால் இன்று அதிமுகவே இல்லை EDMK தான் இருக்கிறது. பழனிச்சாமியை வீழ்த்தி எம்.ஜி.ஆர் தொடங்கிய அதிமுகவிற்கு புத்துயிர் கொடுப்போம். அந்த இலக்கை நோக்கி தான் பயணித்து கொண்டுள்ளோம்.

கரூர் சம்பவம் விபத்து, அது குற்றமில்லை ஆனால் அந்த விபத்திற்கு விஜய் தார்மீக பொறுப்பு ஏற்க வேண்டும். அவர் தார்மீக பொறுப்பு ஏற்றிருந்தால் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்காது.

கரூர் விவகாரத்தில் முதல்வர் நிதானமாக செயல்படுகிறார் என்பதை தான் கூறினேன். விஜயை கைது செய்தால் அது தவறான முன்னுதாரணமாக வந்து விடும் என்பதால் விஜய் கைது செய்யாமல் முதல்வர் அவரின் அனுபவத்தின் படி செயல்படுகிறார்.

விஜய்யின் சவாலை கூட பொருட்படுத்தாமல் முதல்வர் செயல்பட்டு வருகிறார். நியாயமாக பேசினால் முதல்வருக்கு நான் ஆதரவளிப்பதாக சிலர் பேசுகிறார்கள்.

இது போன்ற நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி குறித்து பேசுகிறார். அதிமுக யாருடன் வேண்டுமானால் கூட்டணி சேரலாம் ஆனால் விபத்து நடந்த நேரத்தில் த.வெ க வை  குள்ளநரி தனமாக எடப்பாடி பழனிச்சாமி கூட்டணிக்கு அழைக்கிறார்.தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்றாரா?

நான் யாருக்கும் ஆலோசனை வழங்க தேவையில்லை. நான் கருத்து கந்தச்சாமி இல்லை. காட்டில் ஒழிந்து கொண்டு வீடியோ வெளியிடும் நபரும் அல்ல. எதுவாக இருந்தாலும் நான் நேரடியாக பேசுவேன்.

விபத்து என்பது எப்பொழுது வேண்டுமானாலும் நடக்கலாம்.

நான் முதல்வரை தூக்கியும் பேசவில்லை மற்றவர்களை தாக்கியும் பேசவில்லை.

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக வர வேண்டும் என என  நான் தான் ஏற்கனவே கூறினேன். ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக இருக்க வேண்டும் என நான் கூறவில்லை. எடப்பாடி பழனிச்சாமி தவிர வேறு எந்தசாமியாக இருந்தாலும் அது முனுசாமியாக இருந்தாலும் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை.

பிரச்சார கூட்டத்தில் ஆம்புலன்ஸ் செல்வதை அரசியலாக்க விரும்பவில்லை. இதற்கு காரணம் கற்பிக்க கூடாது. ஆம்புலன்ஸ் அவசரத்திற்காக தான் செல்லும்.

எல்லா ஆட்சிகளிலும் விபத்துகள் நடந்துள்ளது. எவ்வளவு போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்திருந்தாலும் மயக்கம் அடைபவர்களை தடுக்க முடியாது.இந்த விவகாரத்தில் நான் ஆட்சிக்கு ஜால்ரா அடிக்கவில்லை.

திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை, வாக்குறுதிகள் நிறைவேற்றவில்லை இருந்த போதும் மக்கள் 2024 தேர்தலில் திமுகவிற்கு தான் வாக்களித்தார்கள் எனவே 2026 தேர்தலில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட வேண்டும்.

எங்கள் தலைமையில் கூட்டணி கிடையாது. எந்த கூட்டணிக்கு செல்வது என முடுவெடுக்கவில்லை. தேவைப்பட்டால் தனியாக கூட போட்டி இடுவோம்

2026 தேர்தலில் பிரதானமாக நீங்கள் வீழ்த்த நினைப்பது திமுகவையா? எடப்பாடி பழனிச்சாமியையா? என்கிற கேள்விக்கு, துரோகத்தை வீழ்த்துவது தான் எங்கள் பிரதானம் என்றார்.

தேசிய ஜனநாயக  கூட்டணியில்  முதல்வர் வேட்பாளராக பா.ஜ.க வை சேர்ந்தவர்களை அறிவித்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்கிற கேள்விக்கு அவர்கள் அறிவித்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *