முதலியார் பிள்ளைமாரை சேர்ந்தவர்களுக்கு எந்த கட்சியில் சீட்டு கொடுத்தாலும் அவர்களுக்கு நாங்கள் உறுதுணையாக இருந்து செயல்படுவோம் :
-அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் தலைவர் ஓம் சக்தி ராமச்சந்திரன் பேட்டி:
திருச்சி திருவெறும்பூரை அடுத்த காட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் தலைவர் ஓம்சக்தி ராமச்சந்திரன் கூறியதாவது,
முதலியார் பிள்ளைமார் வாக்காளர்கள் மட்டும் ஒரு கோடியே 20 லட்சம் பேர் உள்ளனர்.
இது அரசியல் கட்சி சார்ந்த அமைப்பு அல்ல.
அனைத்துக் கட்சி பிரமுகர்களும் இந்த அமைப்பில் உள்ளனர்.

இந்த சமுதாயத்தைச் சேர்ந்த மக்களுக்கு எந்த கட்சியில் சீட்டு வழங்கினாலும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்து நாங்கள் செயல்படுவோம்.
யார் ஆட்சிக் குறிப்பு ஏற்றாலும் சட்டமன்றத்தில் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த 40 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் அளவிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கையாக உள்ளது.
என்றார்

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பொதுச் செயலாளர் ரகுராம், பொருளாளர் ரவி முதலியார், அமைப்பு செயலாளர்நித்தியக்குமார், கொள்கை பரப்பு செயலாளர் அரசுபரமேஸ்வரன், மகளிரணி செயலாளர் திலகவதி, மத்திய மண்டல செயலாளர் வெங்கட்குமார், இளைஞர் அணி செயலாளர் மகேஷ் முத்துக்குமார் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments