சாலையை முழுவதும் ஆக்கிரமித்த பாதாள சாக்கடை கழிவு நீர் – மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க திருச்சி மேற்கு தொகுதி மக்கள் வேண்டுகோள்.
திருச்சியின் இதயத்துடிப்பு என்று கருதப்படும், தில்லைநகர் கோ-அபிஷேகபுரம் உட்பட்ட, 22 வது வார்டு மேற்கு விஸ்தரிப்பு முதல் கிராஸில், ரோட்டில் 2 நாட்களாக ஆறுபோல ஓடும் மாநகராட்சி பாதாள சாக்கடை கழிவு நீர் சாலையில் கடக்க செல்ல முடியாத அளவிற்கு துர்நாற்றம் வீசுவதால் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்வோர், நோயாளிகள் என பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். சம்பந்தப்பட்ட திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அதிகாரிகள் தெருவில் வழிந்தோடும் பாதாள சாக்கடை விரைந்து சீரமைக்க திருச்சி மேற்கு தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments