திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் மற்றும் திருச்சிராப்பள்ளி டவுன் இரயில் நிலையங்களுக்கு இடையில் கி.மீ 331/700-800- இல் உள்ள Level Cross, No:249-இல் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டு தண்டவாளங்களின் குறுக்கே சுரங்கபாதை மற்றும் இதர பணிகள் நடைபெற்று வருவதால் அவ்வழியே சாலை போக்குவரத்தினால் மேம்பால பணிகளுக்கு இடையூறு ஏற்படாவண்ணம் கனரக வாகனங்கள் சென்று வர ஏதுவாக மாற்று பாதை அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி “ஓயாமாரி வழியே மார்க்கெட் வரும் இலகுரக வாகனங்கள் மட்டும் ஓடந்துறை மேம்பாலம் வழியாக சிந்தாமணி பஜார் சங்கரன்பிள்ளை சாலை வழியே EB ரோடு மற்றும் காந்தி மார்க்கெட் சென்று வரவும், EB ரோடு வழியே செல்ல வேண்டிய கனரக வாகனங்கள் பழைய பால்பண்ணை, காந்தி மார்க்கெட், தர்பார்மேடு வழியே EB ரோடு சென்று வருகின்ற வகையில் போக்குவரத்தினை மாற்றம் செய்து ஆணையிடப்பட்டுள்ளது ‘என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன், அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments