திருச்சி அருகே விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யாமல் புரோக்கர்களுக்கு டோக்கன்களை வழங்கி நெல்கொள்முதல்
இந்த வருடம் காலம் தவறி பெய்த மழையினால் நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ள நிலையில், குளித்தலை அருகே பணிக்கம்பட்டி கிராமத்தில் தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையங்களில் நெல் பெறுவதற்கு டோக்கன் வழங்கி நெல் பெறுவதாக கூறுகின்றனர். ஆனால் விவசாயிகள் நெல் விற்பனைக்கு வாங்கி விற்பனை செய்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்காமல் புரோக்கர்கள் மூலம் டோக்கன்களை வழங்கி அவர்களிடம் மட்டுமே நெல் கொள்முதல் பெறுவதாகவும், விவசாயிகளின் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலைய பகுதிகளில் அடிக்கி வைத்து நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுக்குறித்து, பணிக்கம்பட்டி கிராமத்திலுள்ள விவசாயி பாலகிருஷ்ணன் கூறுகையில்.... கடந்த 15 நாள்களாக விவசாயிகளின் நெல் கொள்முதல் செய்யப்படாமல் இந்த இடைத் தரகர்கள் சிறு விவசாயிகளிடம் இருந்து மிக குறைந்த விலையில் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து இங்குள்ள தமிழக அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்கிறார்கள் இதற்கு துணை போகும் அதிகாரிகள் நேரடியாக நெல்களை கொள்முதல் செய்யாமல், விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்ய லஞ்சம் கேட்பதாகவும், இதற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக அரசு முன்வந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.