பத்மபூஷண் ஸ்ரீ என்.இராமஸ்வாமி ஐயர் கல்வி வளாக நிறுவனர் என்.இராமசுவாமி ஐயர் அவர்களின் 129-ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா மற்றும் பவளவிழா கொண்டாட்டங்களின் தொடக்கவிழா மாணிக்க விநாயகர் அரங்கில் நடைபெற்றது. வளாகத்தின் கல்வி இயக்குநர் முனைவர். சண்ணன் பஞ்சாபகேசன் அவர்கள் கல்வி வளாகத்தின் சாதனைகளை எடுத்தியம்பியும், சிறப்பு விருந்தினர் அமைச்சர் கே.என்.நேரு செயற்கரிய நிர்வாகத்திறத்தினைப் போற்றியும், உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் கல்விச்சேவையினைப் போற்றிப் பாராட்டியும், விழாவிற்கு வருசைபுரிந்திருந்த அனைத்து ஆன்றோர், சான்றோர் பெருமக்களை வரவேற்று வரவேற்புரை ஆற்றினார்.
பத்மபூஷண் ஸ்ரீ என்.ராமஸ்வாமி ஐயர் சல்வி வளாசத்தின் நிர்வாக முதன்மையர் எம்.முத்துசாமி அவர்கள் சிறப்பு விருந்தினர்களாக வருகை புரிந்த அமைச்சர் பெருமக்களுக்கு பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்தார். சாவித்திரி வித்யாசாலா இந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் த.சுதா அவர்கள் நிறுவனரின் கல்விச்சேவையினையும், பெண்கல்வி பேணிய திறத்தினையும் எடுத்துக் கூறி புகழுரை வழங்கினார். சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.வி.அல்லி அவர்கள் எஸ்.ஆர்.சி @ 75 என்ற பொருண்மையில் பவள விழா காணும் கல்லூரியின் கல்விச்சேவைகளைப் போற்றியுரைத்தார். சுயநிதிப்பிரிவுப் பொறுப்பாளர் முனைவர் எஸ்.சாந்தி அவர்கள் பவளவிழா சிறப்பு நிகழ்வுகளின் நிகழ்வறிக்கையினை வாசித்தளித்தார் அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் பவளவிழா பேருரையாற்றினார். அவர்தம் விழாப்பேருரையில், மகளிர் கல்வி பேணும் குணாளராம் நிறுவனரின் சேவைகளையும், முன்னாள் மாணவி நிர்மலா சீதாராமன் போன்ற பல சாதனையாளர்களையும் உருவாக்கிய இக்கல்விநிறுவனம் எதிர்காலத்தில் பல்கலைக்கழகம் என்ற நிலைக்கு உயர்ந்திட வேண்டுமென்ற தனது விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
கல்வி பயிலும் மாணவியர் அரசு வேலைகளுக்கான போட்டித்தேர்வுகளில் கலந்து கொள்ளவும், சட்டக்கல்வி பயின்று நீதித்துறையில் பல உயரிய பதவிகளை வகிக்கவும்
வேண்டுமென்றும் அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில் தமிழ்நாடுஅரசின் உயர்கல்வித்துறையின் அமைச்சர் முனைவர் கோ.வி. செழியன் அவர்கள் நிறுவனரின் 129-ஆவது பிறந்தநாள் பெருமங்கலவிழாவின் சிறப்புரையினை நிகழ்த்தினார்.
இவர்தம் உரையில் பண்பாடு மற்றும் பாரம்பரியம் மிக்க இக்கல்லூரியில் பயிலும் மாணவியர் அனைவரும் தங்கள் அறிவுத்திறனை மேம்படுத்திக்கொண்டு, பல்வேறு நுண்கலைப் போட்டிகளிலும் தங்கள் திறமைகளை வெளிப்படுத்திட வேண்டுமென்றும், மேலும் தமிழ்நாடு அரசின் தேர்வாணையம் நடத்தும் போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற வேண்டுமென்றும், மாணவியர் தங்கள் தேவை எதுவென்பதை ஆராய்ந்து அதன் படி இலக்கினை முதலில் தீர்மானித்து தங்கள் திறமையை வளர்த்துக்கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டுமென்று நல்லதோர் தன்னம்பிக்கை உரை வழங்கினார். கல்வி வளாகத்தில் சிறப்பாக பணியாற்றி பணி ஒய்வு பெறுபவர்களுக்கு நிர்வாக உறுப்பினர் திருமதி மாதவி கண்ணன் அவர்கள் பணிநிறைவு பாராட்டு மடலும். நினைவுப்பரிசுகளும் வழங்கிகௌரவித்தார்.
அறப்பணிச் செம்மலாம் செயலர் ரா.பஞ்சாபகேசன் அவர்கள் தனது தந்தையாரின் நெறியில் கல்விப்பணியாற்றி வருவதோடு ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையினையும் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றார். அவ்வகையில் இந்த ஆண்டு 140 மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகையாக ரூபாய் 4,00,000 வழங்கப்பட்டது. நிறுவனரின் 129-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சார்ந்த மாணவ, மாணவியருக்கிடையே நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி
பெற்றவர்களுக்குப் பரிசுகளும், சுழல்கேடயங்களும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் தேர்வுக்
கட்டுப்பாட்டாளர் முனைவர் வி.அனுசுயா அவர்களும், கல்வி வளாக முதல்வர்கள், பணிநிறைவு பெறும் பள்ளி, கல்லூரியினைச் சார்ந்த ஆசிரியர், பேராசிரியர், அலுவலகப்பணியாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சாவித்ரி வித்யாசாலா, காமகோடி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக காமகோடி வித்யாலயா பள்ளியின் தலைமையாசிரியர் ஜே.வெண்மதி அவர்கள் நன்றி நவில, நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
தமிழ்நாடு அரசுக்கும் உயர்கல்வி துறைக்கும் இடையூறாக இருந்து முட்டுக்கட்டை போடுபவர் தமிழ்நாடு ஆளுநர் – திருச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பேட்டி
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் நிரந்தர பேராசிரியர்கள்
நிரப்பப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில் ஆட்சி செய்தவர்கள் வாய் வார்த்தைகளோடு நின்றார்கள். எந்த செயல்களையும் செய்யவில்லை. திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு நான்காயிரம் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. நீதிமன்றம் குறுக்கீடுகளால் கால தாமதம் ஏற்பட்டது. நான் பொறுப்பெற்ற பிறகு நீதிமன்ற கடைகளை சில வழி நிபந்தனைகள் விதிக்கப்பட்ட நிலையில் இருந்து நீதிமன்றத்திற்குரிய எண்ணிக்கை தவிர 2040 பேருக்கு நிரந்தர பணியாளர்கள் அறிவிப்பை வெளியிட இருக்கிறோம். ஒரு வார காலத்தில் அறிவிப்பு வெளியாகி ஒரு மாத காலத்தில் விண்ணப்பங்கள் பெற இருக்கிறோம். அதன் பிறகு அவர்களுக்கான தேர்வு அடையாள அட்டை அனுப்பி தேர்வு நடத்துகிறோம். முடிவுகள் அறிவித்து நிகழாண்டிலேயே ஆசிரியர் பணிகளை பணியாற்றும் வாய்ப்பை முதல்வர் உருவாக்கிக் தந்திருக்கிறார். பணியிடங்கள் நிரப்பாமல் காலி இருக்கிறது அர்த்தமில்லாத வார்த்தை பாடப்பிரிவு ஷிப்ட் 2, 64 கல்லூரியில் அதிகமாக உருவாக்கி இருப்பதாலும் புதிய புதிய கல்லூரிகள் 34 கல்லூரிகள் 16 கல்லூரிகள் நான் பொறுப்பற்ற பிறகு விரிவடைந்த நிலையில் ஆசிரியர் பணியிடம் தேவைப்படுகிறது.திமுக அரசு பொறுப்பேற்றவுடன் 2010 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நிமித்தப்பட்டன ஆறு மாசத்துக்கு முன்பு 540 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர் 881 பேருக்கு கெளரவ விரிவுரையாளர்
பணிக்கு விண்ணப்பங்கள் பெறுவதில் நேற்று கடைசி நாள் விண்ணப்பங்கள் பெறுவதில் அந்த வகையில் 2200 மேற்பட்ட கௌரவ பணியாளர்கள் 2700 க்கும் மேற்பட்ட நிரந்தர பணியாளர்கள்
உயர்கல்வியில் பணியிடங்களில் நிரப்பும் முயற்சியில் தமிழ்நாடு அரசு முதலமைச்சரும் உத்வேக பாதையில் வழி நடத்துகிறார்கள் அதன்படி நடக்கும்.
காலி பணியிடங்கள் பற்றாக்குறை என்ற வார்த்தை இந்த அரசில் இருக்காது,இருக்க முதலமைச்சரை விட மாட்டார்.
பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் 69 கோடி சம்பளம் கொடுத்து திரும்ப இன்னும் தரவில்லை என்ற கேள்விக்கு பல்கலைக்கழகங்களில் ஏற்றுகொள்ளபட்ட சம்பள விகிதாச்சாரத்தை தவிர பல்கலைக்கழகங்கள் நிதி நிதி ஆதாரம் இல்லாத ஒரு சில பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளுக்கு தமிழக அரசு ஊதியம் வழங்குவதற்கான கருத்துருவை முதலமைச்சரிடம் பேசி வருகிறோம் பல்கலைக்கழகங்கள் ஊதியங்களை வழங்க முடியாமல் இருக்கும் நிலையில் அவர்களுக்கு நிச்சயம் ஊதியத்தை வழங்குவோம்.
உயர்கல்விக்கு ஆளுநர் தொடர்ந்து எந்த அளவு இடைஞ்சலாக இருக்கிறார் என்று நாங்கள் அவ்வப்போது சொல்லிய வண்ணம் இருக்கிறோம். பத்திரிக்கையாளர்களா நீங்கள் இருந்தாலும் நீங்கள் தமிழ்நாட்டில் குடிமக்களாக இருப்பதை நீங்கள் உணர்ந்து இருக்கிறீர்கள்.அரசு செய்யும் காரியங்களுக்கு ஆளுநர் துணை நிற்க வேண்டும். தவிர அரசு செய்யும் பணிகளுக்கு முட்டுக்கட்டை போடுபவர் தமிழ்நாடு ஆளுநர். கலைஞர் பல்கலைக்கழகம் கொண்டு வருவதற்கு உத்தரவு தர மறுக்கிறார். துணை வேந்தர் நியமனத்தில் நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு பல பல குறுக்கீடுகள் சட்டத்தை நிலை நாட்டை கூட அரசு நீதிமன்றத்தை நாடும்நிலையை உருவாக்கி இருப்பது ஆளுநர்தான். உயர்வு கல்விக்கும் தமிழ்நாட்டிற்கும்
தடையாக இருப்பது கவர்னர் அந்த தடைகளை முறியடித்து உயர்கல்வியை உயர்ந்த இடத்திற்கு உயர்த்தி தருவார் முதல்வர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments