Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ஓவிய கண்காட்சி இன்று தொடக்கம்

திருச்சி டிசைன் ஓவியப் பள்ளியின் பதிமூன்றாம் வருட ஓவிய கண்காட்சி திருச்சியில் 2023 ஆகஸ்ட் 26, 27 ,28 தேதிகளில் ஹோட்டல் ரம்யாஸ் சௌபாக்கியா குளிர் அரங்கில் மூன்று நாட்கள் தூரிகை ஓவியத்தில் சீர்மிகு திருச்சியும் வாழ்ந்த ஆளுமைகளும் தலைப்பில் 38 மாணவர்களின் ஓவிய கண்காட்சி நடைபெறுகிறது.

 திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் கண்காட்சியிணை திறந்து வைத்தார். ஓவியர் மார்க் ரத்தினராஜ் ஓவியங்கள் குறித்து சிறப்புரையாற்றினார். 

தூரிகை ஓவியத்தில் திருச்சியில் வாழ்ந்த ஆளுமைகளை சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி ஆன கதை , 

 வீரமாமுனிவர், கோடுகளின் ஆதியும் வண்ணங்களின் மூலமும் ஓவியர் ஆதிமூலம், கரிகாலன் முதல் காட்டன் வரை, காலத்தின் கையில் கல்லணை என்ற தலைப்பிலும், கற்றவர்கள் தலை வணங்கும் கோயில், காலத்தால் நிமிர்ந்து நிற்கும் மூத்த திருச்சி கல்லூரிகள், மகாத்மா காந்தி திருச்சி வருகை, தாகம் தீர்த்த தலைவர் பி .ரத்தினவேல், மலையப்பனின் மகத்தான வாழ்வும் சாதனைகளும், ராணி மங்கம்மா கதை, ஆயிரம் கண்ணுடைய சமயபுரம் மாரியம்மன், கரிகால சோழன், கி.ஆ.பெ.விசுவநாதன், ,பாரத மிகு மின் நிலையம், பறவைகள் பலவிதம், எழுத்தாளர் குமுதினி, தந்தை பெரியார் மாளிகை , கிளாரினெட் ஏ.கே.சி. நடராஜன், கவிஞர் திருலோக சீதாராமன், கலை காவேரி நுண்கலைகல்லூரி, மக்களின் தோழர் எம்.கல்யாணசுந்தரம், திருச்சி வேளாண்மையின் மகத்துவம், தமிழ் எழுத்தாளர் சுஜாதா , காதோடுதான் நான் பேசுவேன் அகில இந்திய வானொலி திருச்சிக்கு வந்த வரலாற்றைப் பற்றியும், சுழலில் சிக்கிய ஆளுமை ஐயரின் வாழ்க்கை வரலாறு, 

எம்.கே.டி.பாகவதர், எழுத்தாளர் ராஜம் கிருஷ்ணன், நடிகைவேல் எம்.ஆர்.ராதா, முதலாம் மொழிப் போரில் திருச்சி என பல்வேறு சீல் திருச்சியில் வரலாறும் ஆளுமைகளைப் பற்றி ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன. டிசைன் பள்ளி தாளாளர் மதன் முதல்வர் நசத் பேகம் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்.

கவிஞர் நந்தலாலா திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கல்விக்குழு தலைவர் பொற்கொடி யோகா ஆசிரியர் விஜயகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *