Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

பஞ்சப்பூர் பொதுக்கூட்டம் ஆட்சி மாற்றத்தின் தொடக்கம் – நயினார் நாகேந்திரன்

திருச்சி ஆட்சியர் அலுவலகம் சாலையில் உள்ள தனியார் விடுதியில் பாஜக மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் …

அதில், ஆட்சி மாற்றத்திற்கான அடிகோல் விழாவாக பஞ்சப்பூரில் நடைபெறும் இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி அவர்கள் பங்கேற்க உள்ளார்கள், தமிழகம் முழுவதும் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்கள் குடும்பத்தினர் பங்கேற்க வேண்டும் என நயினார் அழைப்புவிடுத்தார்.

ஏழு லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாக ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளது, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் புதிய திட்டங்கள் மற்றும் வந்தே பாரத் ரயில் சேவை பணிகள் துவக்கி வைக்கப்பட உள்ளது.

எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம் என்பது பல விஷயங்களுக்காக சென்றிருக்கலாம், அதனை தொகுதி பங்கீடுக்காக மட்டும் என கூறமுடியாது

யார் முதல்வர் என்பதை தீர்மானிப்பது பொதுமக்கள் தான், ஸ்டாலின் அல்ல … 200 இடங்களுக்கு மேல் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெல்வோம், புரட்சித்தலைவி அம்மா கொண்டு வந்த திட்டங்களை திமுகவினர் நிறுத்திவிட்டனர் திமுக என்ன திட்டங்கள் நிறைவேற்றினார்கள்? 28 மாதங்களாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படவில்லை, அதுவும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அந்த பணம் வழங்கப்பட்டது. வாக்கு வாங்கி அரசியலை முன்னெடுக்கும் திமுக அரசு எந்தத் தொகுதியில் எந்த திட்டங்களை கொண்டு வந்தார்கள் நான் முதல் திட்டம், என்ன திட்டத்தை செயல்படுத்தினார்கள் என்பதனை முதல்வரால் சொல்ல முடியாது. மத்திய அரசின் பங்களிப்புடன் தான் திட்டங்கள் செயல்படுத்த முடியும் திமுக அரசால் சொந்தமாக செயல்படுத்த முடியாது.

மத்திய அரசின் பணம் மக்களுக்காக நேரடியாக செல்வதால் அவர்கள் மத்திய அரசுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என்பதால் மக்கள் பெறக்கூடிய சலுகைகளை திமுகவின் தடுத்துவிட்டனர், முத்ரா வீடு கட்டும் திட்டத்தில் 6 லட்சம் பேருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு, மூன்று லட்சம் பேருக்கு மட்டுமே வீடு வழங்கப்பட்டுள்ளது.

சிபிஐ, இடி போன்றவை தனி நிர்வாகம், நிறைய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர ஆவலில் உள்ளனர்.

நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு என்பது மிகப்பெரிய பொய், நான் ஒரு எரிவாயு டீலர் என்பதால் இதனை உறுதிப்படக் கூறுகிறேன். அதேநேரம் ஹோட்டலில் உணவு குறைப்பதற்கும், எரிவாயு தட்டுப்பாட்டுக்கும் சம்பந்தமில்லை, ஹோட்டல்களில் எரிவாயு தட்டுப்பாடு அதனால் உணவு குறைப்பு என்பது எதிர்க்கட்சிகள் போட்டுள்ள அறிவிப்பு என்றார்.

திரிஷா விவகாரத்தில் பெண்களைப் பற்றி பேசக்கூடாது என்பதனை கூறிவிட்டேன்..

நாளைய தினம் பிரதமர் பங்கேற்கும் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் பாஜக சார்பில் தேர்தல் வாக்குறுதிகள் கொடுக்கப்படும் …28 மாதங்களாக ஏன் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கவில்லை என முதல்வரை யாரும் கேள்வி எழுப்பவில்லை ஏன் என்றும் தெரியவில்லை,விஜயின் கொள்கை என்னவென்று முதலில் கூறிவிட்டு அதன்பின்னர் மற்ற கட்சிகளின் கொள்கை என்ன என்பதை கேட்கட்டும் என்றார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *