திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள மேய்க்கல்நாயக்கன்பட்டி என்ற ஊரில் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு தாய் திட்டத்தின் கீழ் ரூபாய் 30 லட்சம் மதிப்பில் உடற்பயிற்சி உபகரணங்களுடன் கூடிய அம்மா பூங்கா அமைக்கப்பட்டது. குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், பெரியவர்களுக்கான உடற்பயிற்சி உபகரணங்கள் என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்ட இந்த பூங்கா தற்போது வரை திறக்கப்படாமல், பொதுமக்கள் பயன்படுத்த முடியாத சூழலில் இருக்கிறது.
எட்டு வருடங்களாக திறக்கமுடியாமல் இருக்கும் இந்த பூங்காவில் தற்போது உடற்பயிற்சிக்கென வைத்திருந்த எந்த உபகரணங்களும் இல்லை, முள் செடிகள் வளர்ந்து புதர்களாக காட்சியளிக்கும் இந்த பூங்காவில், கால்நடைகள் மேய்த்து வரும் சூழலும் நிலவுகிறது, இதுகுறித்து பலமுறை ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை வைத்தும் தற்போது வரை எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் உள்ளனர்.
முட்புதர்களின் ஆக்கிரமிப்பில் இருக்கும் இந்த அம்மா பூங்காவை திறக்கும் பட்சத்தில் பொதுமக்களுக்கு பொழுதுபோக்காக இருக்கும், கூடவே காணாமல் போன உடற்பயிற்சி உபகரணங்களையும் கண்டுபிடித்து பாதுகாக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments