தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரசியல்கட்சியினர் எந்த ஒரு நிகழ்வும் நடத்தக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும், பள்ளிக்கல்வித்துறையும் அறிவிப்பு விடுத்திருந்த நிலையில், பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி ஸ்ரீரங்கம் அரசு நடுநிலைப்பள்ளியில் திமுக ஸ்ரீரங்கம் பகுதி பொறுப்பாளர் ராம்குமார் தலைமையில் திமுகவினர் அண்ணா பிறந்தநாளை கொண்டாடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் போடுவது மற்ற கட்சிகளுக்கு தான்போல, அவர்களது கட்சிக்கு இல்லை என்பதை காட்டும் விதமாகவே உள்ளது, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது கட்சியினருக்கு முதலில் இதனை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்களும்
பொதுமக்களும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments