திருச்சிராப்பள்ளியிலிருந்து வெளியூர் செல்ல அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் 16.07.2025 முதல் பஞ்சப்பூர் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திலிருந்து பயணம் மேற்கொள்ளலாம்.
மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் அறிவிப்பு.திருச்சிராப்பள்ளி பஞ்சப்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் 09.05.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இப்பேருந்து முனையத்தில் பயணிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொடர்ந்து 16.07.2025 புதன்கிழமை அன்று காலை 6 மணி முதல் நகர் மற்றும் புறநகர் பேருந்துகள் இப்பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட உள்ளது.
இந்நிலையில், நாளை (16.07.2025) முதல் அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு, குறிப்பாக சென்னை, பெங்களூர், ஊட்டி, கோயம்புத்தூர், எர்ணாகுளம், நாகர்கோயில், திருச்செந்தூர். காஞ்சிபுரம், திருத்தணி மற்றும் திருப்பதி ஆகிய ஊர்களுக்கு செல்வதற்காக ஏற்கனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள், தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்த நேரத்திற்கு, பஞ்சப்பூர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனைத்திலிருந்து பயணம் மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.சரவணன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…
Comments