தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநிலத் தலைவர் தமிழ் தேசிய தலைவர் சி.பசுபதி பாண்டியன் அவர்களின் 14 ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு இன்று (11.01.2026) காலை 9:00 அளவில் இருந்து மாலை 5:00 வரை திருச்சி உறையூர் மேலகல்நாயக்கன் தெருவில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஐயா அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாகவும், வீரவணக்கம் செலுத்தப்படுகிறது மற்றும்
குருபூஜை விழாவை முன்னிட்டு 2000 நபர்களுக்கு அன்னதானம், ஹர்ஷமித்ரா மருத்துவமனை மூலமாக இலவசம் மார்பகம் மற்றும் கர்ப்பப்பை புற்று நோய்க்கு முகாம் நடைபெறுகிறது, கதிர் மருத்துவமனை மூலமாக பொதுமக்களுக்கு இலவசமாக முகாம் நடைபெறுகிறது, மேலும் ஐ பவுண்டேஷன் மூலமாக பொதுமக்களுக்கு இலவசமாக கண்கள் பரிசோதனை செய்யப்படுகிறது மற்றும்
ரெயின்போ ரத்த வங்கி மூலம் ஏராளமான இளைஞர்கள் ரத்த தானம் செய்யப்படுகிறது, இந்நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்ற கழகம், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, பாரதிய ஜனதா கட்சி, விடுதலை சிறுத்தை கட்சி, தமிழ்நாடு மண்ணுரிமை கட்சி, தாய் தமிழ்நாடு மக்கள் கழகம்,தமிழர் தேசிய கழகம்,நாம் தமிழர் கட்சி, தமிழர் தேசம் கட்சி, தமிழக வெற்றி கழகம், பாட்டாளி மக்கள் கட்சி,
தேவேந்திர குல வேளாளர் வழக்கறிஞர்கள் சங்கம், வெள்ளாளர் முன்னேற்ற கழகம், மற்றும் ஏராளமான அரசியல் பிரமுகர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் தேசிய தலைவர் பசுபதி பாண்டியன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments