கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கப்பட்டுள்ளது. இதில் 3 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு அதிகமாக உள்ள அனைத்து நிறுவனங்கள் மற்றும் கடைகள் செயல்படக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி மாநகரில் உள்ள பிரபல தனியார் நிறுவனங்கள் திறக்கப்படாமல் மூடப்பட்டுள்ளன.
ஆனால் திருச்சி பீமநகரில் உள்ள பிரபல தனியார் சூப்பர் மார்க்கெட் நேற்று காலை திறக்கப்பட்டு மக்கள் கூட்டம் இருந்தது. இது குறித்து தகவல் அறிந்து மாநகராட்சி அதிகாரிகள் அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்று 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மேலும் அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் பணியாளர்களை வெளியேற்றிவிட்டு சூப்பர் மார்க்கெட்டை பூட்டினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf
Comments