Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சிக்கு நான்கு எம்பி, ஐந்து எம்பி இருப்பதாக விமர்சனம் செய்கிறார்கள் –  எம்.பி வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக் பேட்டி

மாநிலங்களவை உறுப்பினர் தேர்வில் தமிழகத்தில் 6 இடங்கள் தற்பொழுது காலியாகியுள்ளது. இதற்கான மனு தாக்கல் முடிவுற்றது.

திமுக சார்பில் நான்கு இடங்கள் இருந்த நிலையில் இரண்டு இடங்கள் திமுக சார்பில் திருச்சி  சிவாவும், பேராசிரியர் கான்ஸ்டன்ட்டைன் ரவீசந்திரன், தேமுதிக சார்பில் சுதீஷ், காங்கிரஸ் கட்சி சார்பில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் மனு தக்கல் செய்தனர்.

காங்கிரஸ் சார்பில் மனு தாக்கல் செய்த கிறிஸ்டோபர் திலக் இன்று சென்னையில் இருந்து விமான மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.

அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில்.

கடந்த எட்டு வருட காலமாக காங்கிரஸ் கட்சியில் பணிபுரிந்த எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தப் பெருமை எனக்கு மட்டுமல்ல என்னுடன் இருக்கும் ஒவ்வொரு காங்கிரசாருக்கும் பெருமையான விஷயமாகும்.

தொண்டனுக்கும் மாபெரும் வெற்றி.
மணிப்பூர், சிக்கிமில் பணியாற்றியது அது காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு பொறுப்பு. தற்பொழுது பணியாற்ற இருப்பது ஒரு கான்ஸ்டியூசனல் போஸ்ட். இதற்காக மாநிலங்களவையில் பேசக்கூடிய ஒரு பணி. தமிழகத்தில் பிரச்சனைகளை எடுத்து உரைக்க வகையில் கிடைத்த வாய்ப்பு நல்லபடியாக பயன்படுத்துவேன்.

திருச்சிக்கு நான்கு எம்பி ஐந்து எம் பி இருப்பதாக நாளிதழ் உள்ளிட்டவைகளில் விமர்சனம் செய்துள்ளார்கள் அவர்களுடன் இணைந்து திருச்சியை மேலும் வளப்படுத்த தொடர்ந்து முயற்சி மேற்கொள்வேன் திருச்சிக்கு தேவையானவற்றை பாராளுமன்றத்தில் குரல் எழுப்புவேன். திருச்சி அடுத்த கட்டத்திற்கு ஒரு சிறந்த நகரமாக கொண்டு செல்லும் வழிவகை முயற்சி மேற்கொள்வேன்.

மோடி அடிக்கடி தமிழகம் வருகை குறித்த கேள்விக்கு?

கும்பகோணம் டிகிரி காப்பியை
ஆத்துவது போல் ஒரு வேட்டி சட்டையை மாட்டி விட்டு சீன் கொடுத்து விடுவார்கள்.
கொடுத்த ஸ்கிரிப்ட் அவர் பேசிவிட்டு சென்றுவிடுவார்.

அவர் ஒவ்வொரு முறையும் தமிழகத்தில் வரும் பொழுது என்ன அரசியல் ரீதியாக என்ன  நடைபெறுகிறது என்பதை உற்று நோக்கி பார்க்க வேண்டும்.

இந்தியா கூட்டணியில் இருக்கும் அனைவரும் சமூகரீதியாகவும்,
அரசியல் ரீதியாகவும் நம் உற்றுப் பார்க்க வேண்டும் என தெரிவித்தார்.

பேட்டின் போது திருச்சி மாவட்ட தலைவர் ரெக்ஸ் மற்றும் கட்சியினர் உடன் இருந்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *