மக்கள் சித்த மருத்துவத்தை நம்பிக்கையோடு அணுகவேண்டும் - அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையத்தை திறந்துவைத்து அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

மக்கள் சித்த மருத்துவத்தை நம்பிக்கையோடு அணுகவேண்டும் - அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையத்தை திறந்துவைத்து அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

திருச்சி காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் கொரோனா நோயாளிகளுக்கான 200படுக்கை வசதிகளுடன் கூடிய அரசு சித்தா கொரோனா புத்துணர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த புத்துணர்வு மையத்தை  ஊரகவளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும்  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் திறந்து வைத்தனர்.

இம்மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கான சித்த மருந்துகள்  கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் காலை 6 மணிக்கு வழங்கப்படும். அதைத் தொடர்ந்து வாய் கொப்பளித்தல், நடைபயிற்சி, 8 வடிவ நடைபயிற்சி, ஆவி பிடித்தல், யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி போன்றவை பயனாளிகளுக்கு கொடுக்கப்பட இருக்கிறது. ஆரோக்கியமான உணவுகள் மூன்று வேளையும் வழங்கப்பட இருக்கிறது. பயனாளியின் அறிகுறிகளுக்கேற்ப சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், காய்ச்சலுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை, சளி, இருமலுக்கு தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, தலைவலிக்கு நீர்க்கோவை மாத்திரை, பெயின் பாம், நுகர்வுத் தன்மைக்கு ஓமப்பொட்டணம்,  உடல்வலிக்கு விஷ்ணு சக்கர மாத்திரை போன்ற மருந்துகள் கொடுக்கப்பட உள்ளன.

மேலும் இவ்வளாகத்தில் மன கவலையைப் போக்க பாரம்பரிய விளையாட்டுகளை நினைவு படுத்தும் வகையில் விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.சிகிச்சை மையத்தை திறந்து வைத்து சித்தா மற்றும் ஹோமியோபதி மருந்துகள் கண்காட்சி மற்றும் ஆவிபிடித்தல் மையத்தையும் படுக்கை வசதிகளையும் பார்வைiயிட்டபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு… மருத்துவமனையில் இடம் கிடைக்காதவர்கள், சித்த மரு;ததுவ நம்பிக்கையுடையவர்கள் இங்கு வரவேண்டுமு; என்பதற்காகவும், மருத்துவமனைகளில் இடமில்லையென்று காத்திருந்து நோயை அதிகரிப்பதைக்காட்டிலும் இங்கு வந்து கட்டுப்படுத்தும்வகையில் சிகிச்சைபெற்று செல்ல தொடங்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவ முறையை நம்பிக்கையோடு மக்கள் அணுக வேண்டும். சித்த மருத்துவத்தில் நோய் குணமாக சற்று தாமதமானாலும் நிரந்தரமாக நோய் குணமடையும் என்றார்.

சித்த மருத்துவர் காமராஜ் பேசுகையில்… தமிழகத்தில் முதன்முதலாக திருச்சியில் சித்தமருத்துவ சிகிச்சை மருத்துவம் தொடங்கப்பட்டுள்ளது, இங்கு கபசுர, தாளிசாதி மற்றும் அரசு வழிகாட்டுதலின்படி அனுமதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு அவர்களின் தேவைக்கேற்ப மருந்துகளும், சிகிச்சைகளும் வழங்கப்படவுள்ளது. திருச்சி மற்றும் அருகிலுள்ள மாவட்ட மக்கள் பயனுறவேண்டும் என்றும், கொரோனா தொற்று இருந்தால் குணமாகும், தொற்று வராமல் இருக்கவும் மருந்துகள் சித்த மருத்துவமனையில் வழங்கப்படுகிறது. கொரோனா இல்லாத மாவட்டமாக மாற ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர்.எஸ்.காமராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LMjYKIMPovQFY7TKezdoBK