தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 3 தினங்களே உள்ள நிலையில் ஆடை, அணிகலன்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் தள்ளுபடியில் வாங்கிடவும் என்எஸ்பி ரோடு, சிங்காரத்தோப்பு, தேரடி வீதி, பெரிய கடைவீதி, நந்திகோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் குவிந்தனர்.
இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், வரும் நாட்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதாலும் பொதுமக்கள் இன்றே குடும்பத்தினருடன் வந்திருந்து ஆடைகளை வாங்கி வருகின்றனர்.
திருச்சி மட்டுமன்றி பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் வந்திருந்தனர்
பொதுமக்கள் பாதுகாப்புக்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு, பொதுமக்கள் தங்களது உடைமைகளை பாதுகாத்துடன் வைத்திருக்குமாறு போலீசார் தொடர்ந்து அறிவுறுத்திவருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments