திருச்சி தஞ்சை பால்பண்ணை சாலை பொங்கல் விடுமுறை முடிந்து டெல்டா பகுதியில் இருந்து வெளியேறும் வாகனம், மதுரை சாலையில் இருந்து சென்னை நோக்கி படையெடுக்கும் வாகனம்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை கடந்த 15-ந்தேதி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் மாட்டு பொங்கல் கொண்டாடப்பட்டது. பொங்கல் பண்டிகையின் நிறைவாக காணும் பொங்கல் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தொடர் விடுமுறை காரணமாக வெளியூர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்த பொதுமக்கள் குடும்பத்துடன் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
இந்த நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து சொந்த ஊரில் இருந்து மக்கள் சென்னைக்கு திரும்பிய வண்ணம் உள்ளனர். கார், வேன், அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், இருசக்கர வாகனங்களில் ஒரே நேரத்தில் சென்னையை நோக்கி திரும்பியுள்ளனர். இதனால் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 1 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நீண்ட வரிசையில்ஊர்ந்தபடி செல்கின்றன.
வாகனங்கள் மெல்ல ஊர்ந்து செல்வதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments