Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

இறந்தும் உயிர் வாழ வைத்த குடும்பத்தினர்க்கு உதவித் தொகை, பாராட்டு சான்றிதழ் வழங்கிய மக்கள் சக்தி இயக்கம்

ஜுலை 1ம் தேதி திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் ஓட்டுனராக பணியாற்றிய திரு செல்வராஜ் சமயபுரம் அருகில் விபத்தில் மூளை சாவு அடைந்ததும் அவரது மனைவி சுப்த்ரா மற்றும் குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய முன் வந்து கல்லீரல், கிட்னி, இதயம், கண்கள் போன்ற உறுப்புகளை திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு தானம் செய்தார்கள்.

சமுதாயத்துக்கு எடுத்துக்காட்டாக, அரும் பெரும் செயலாற்றி, சமூக பார்வைக்கும், மன ஆற்றலுக்கும் செய்யலை செய்த செல்வராஜ் மனைவி சுபத்ரா செல்வராஜ், மகன் அசோக் ராஜ், மகள் கங்கா ஷர்மி ஆகியோரை நேரில் சென்று செல்வராஜ் மறைவுக்கு ஆழந்த இரங்கல்களை தெரிவித்ததுடன்

இறந்தும் அவர் உயிர் வாமும் விதமாக அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியதற்கு, திருச்சி மாவட்ட மக்கள் சக்தி இயக்கம் சார்பாக செல்வராஜ் மகள் படிப்பு செலவிற்கு 10,000 ரூபாயயும் ஈடுகட்ட முடியாத ஈகைச் செயலை பாராட்டி சான்றிதழும் வழங்கி பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மக்கள் சக்தி இயக்க மாநில துணை பொதுச் செயலாளர் வெ.ரா சந்திரசேகர் தலைமையில், மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோ, மாநில ஆலோசகர் கே.சி. நீலமேகம், செந்தண்ணீர்புரம் திரு சூரியமுர்த்தி மற்றும் பலர் கலந்துக் கொண்டார்கள்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *