Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த நபர்கள் – சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர்க்கு பெண் வழக்கறிஞர்கள் கோரிக்கை!!

திருச்சியில் சாலையோரம் தங்கியிருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முதல்வர்க்கு பெண் வழக்கறிஞர்கள் ஜெயந்திராணி,சித்ரா விஜயகுமார் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனுவில், திருச்சிராப்பள்ளி மாநகராட்சி,
கோ-அபிஷேகபுரம் கோட்டம், புத்தூர் மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனை முன்பு உள்ள YMCA விளையாட்டு திடல் முன்பு ஆபிஸர்ஸ் காலனி, மதுரம் காம்ப்ளக்ஸ் கட்டிட வளாகம் முன்பு திருச்சி, காட்டூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உடலில் காயங்களுடன் இருந்துள்ளார்.

கடந்த 17 செப்டம்பர் 2020 இரவு சுமார் 11-30 மணிக்கு மேல் ஒருவர் போலீஸ் என்று கூறி இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று உள்ளார். 18ம் தேதி அதிகாலை 5 மணிக்கு ஆட்டோவில் நான்கு நபர்கள் அலங்கோலமான நிலையில் உதட்டில் காயத்துடன் ரத்தம் வடிந்து வந்த நிலையில் ஆடையுடன் ஸ்ரீ அம்மன் மெஸ் அருகில் இறக்கி விட்டு விட்டனர்.

இறக்கி விடப்பட்ட பெண் கட்டிட வளாகம் முன்பு உள்ள படியில் அமர்ந்துள்ளார். அமர்ந்த இடம் முழுவதும் ரத்தம் இருந்துள்ளது. அம்மன் மெஸ் சமையல்காரர் கார்த்திக் இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர்க்கும், பாய்ஸ் ஆம்புலன்ஸ் உரிமையாளர் முஹம்மது
இலியாஸ்க்கும் தகவல் தெரிவித்துள்ளார்.
தகவலறிந்த இலியாஸ் அரசு உதவி எண்ணுக்கு போன் செய்ய, தொடர்பு கொள்ளாமல் போக என் திருச்சி டாட்காம் மின்னிதழ் ஆசிரியர் வெற்றிச்செல்வன் என்ற விஜயகுமார்க்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் திருச்சி,புத்தூர் YMCA விளையாட்டு மைதானம் முன்பு சென்று பார்த்த விஜயகுமார் வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா உள்ளிட்டோர்க்கு தகவல் அளிக்க, உடனடியாக காவல் உதவி எண் 100க்கு போன் மூலம் புகாரை பதிவு செய்தோம்.
அதே நேரத்தில் துணை ஆணையருக்கும் தகவல் அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் இளம் பெண்ணை பாதுகாக்கும் வகையில்
வழக்கறிஞர்கள் ஜெயந்தி ராணி, சித்ரா உள்ளிட்ட , யோகா ஆசிரியர் விஜயகுமார், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் முகமது இலியாஸ், மணிகண்டன், செய்தியாளர் இப்ராஹிம் உள்ளிட்டோர் மீட்டெடுத்தனர்.

புகார் அடிப்படையில் விசாரணைக்கு வந்த
கோட்டை சரக துணை ஆணையர் ரவி ஆபிரகாம், உறையூர் காவல் நிலைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் விஜயகுமார், அனைத்து மகளிர் காவல்நிலைய பெண் காவல் ஆய்வாளர் ஆனந்தி வேதவல்லி ,உதவி ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரிடம் பாதிக்கப்பட்ட பெண்ணை ஒப்படைத்தோம். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ சிகிச்சைக்காக மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் காவலர்கள் சேர்த்தனர்.

https://youtu.be/KHZ3W-BpWV0
Advertisement

பாதிக்கப்பட்ட பெண் பலர் என்னை கற்பழித்து விட்டார்கள் என தெரிவித்துள்ளார். எனவே கணம் முதல்வர் அவர்கள் கூட்டு பலாத்காரம் செய்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.மேலும் இம்மாதிரியான ஆதரவற்று இருப்பிடமின்றி சாலையோரம் தங்கியிருக்கக் கூடிய பெண்கள் வன்கொடுமைகளுக்குஆளாகாமல் பாதுகாப்புடன் பராமரித்து அவர்களின் நலன் காக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *