திருச்சி மாவட்ட திருவெறும்பூர் ஒன்றியம் குண்டூர் ஊராட்சி பகுதியில் MIET கலைக் கல்லூரி நுழைவு வாயில் பிரதான சாலையில் மின்கம்பங்கள் பழுதாகி உள்ளது. அதற்கு அடுத்து சுமார் 500 மீட்டர் தொலைவில் ஆத்து கரையில் அதிக பவர் உள்ள லைன் சப்ளை ஆகும் மின் கம்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.

இந்த இரண்டு மின்கம்பங்களையும் சரி செய்ய வேண்டும் அல்லது புதிய மின் கம்பங்களை அங்கு மாற்றி அமைக்க வேண்டும் என்று MIET கலைக்கல்லூரி பிரதான சாலையில் குடியிருக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மக்கள் பாதை இயக்க பொறுப்பாளர் காசிராஜன் இது குறித்து கூறுகையில்,
மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பிரதான சாலையில் இப்படி மின்கம்பங்கள் பழுதடைந்து உள்ளது. சாலையை பயன்படுத்த பொதுமக்களுக்கு அச்சுறுத்தும் விதமாக இவை உள்ளன.

இதனை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று திருச்சி மண்டல மின்சார துறையிடம் கோரிக்கை வைத்துள்ளோம். மக்களின் நலனை கருத்தில் கொண்டு மின்சார துறை மேலாளர் கவனத்தில் கொண்டு சென்று இரண்டு மின்கம்பங்களை மாற்றுவதற்கு பரிந்துரை செய்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளோம் என்கிறார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve







Comments