திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் வருகின்ற (21.03.2022) திங்கட்கிழமை முதல் மாநகர மக்களின் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் தகவல்

தமிழக முதலமைச்சர் மற்றும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் ஆகியோர் ஆணைக்கினங்க திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் .மு.அன்பழகன், மேயர் அலுவலக கூட்ட அரங்கில் (21.03.2022) அன்று முதல் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 11.00 மணி முதல் 12.30 வரை மாநகர பொதுமக்களிடம் கோரிக்கை மற்றும் குறைதீர்க்கும் மனுக்களை பெற்று நடவடிக்கை மேற்கொள்ள உள்ளார். எனவே, மாநகர பொதுமக்கள் இக்குறைதீர்க்கும் நாளை பயன்படுத்தி பயன்பெறுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK
#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments