திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு - உடனே கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு  - உடனே கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்!

Advertisement

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியிலுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு பெரியாரின் உருவ சிலை இருந்து வந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் காவி சாயம் பூசி , செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.இதனால் இனாம்குளத்தூர் சமத்துவபுரம் பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது. மத்திய மண்டல ஐஜி,எஸ்.பி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்‌.

இந்நிலையில் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை மற்றும் காவி சாயம் பூசியவர்களை உடனடியாக கைது செய்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலைக்கு முன்பாக பெரியார் சிலையை அவமதிப்பு செய்தவர்களை உடனடியாக கைது செய்து வழக்குப் பதிய வேண்டும் என்றும், கைது செய்யாவிட்டால் முற்போக்கு அமைப்புகள் ஒன்றிணைந்து தொடர்ச்சியாக இயக்கங்கள் நடத்தப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் வினோத் மணி, DYFI மாவட்ட செயலாளர் பா.லெனின், வழங்கறிஞர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன், துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மாறன், ஊ.ம. தலைவர் பிரகாசமூர்த்தி, மாநகர செயலாளர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் இளங்குமரன், திராவிட இயக்க தமிழர் பேரவை மா. இளைஞர் அணி செயலாளர் பிரவீன் குமார், மோகன் SFI மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றார்கள்.