திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு - மத்திய மண்டல ஐஜி, எஸ்.பி நேரில் ஆய்வு!!

திருச்சியில் பெரியார் சிலை அவமதிப்பு - மத்திய மண்டல ஐஜி, எஸ்.பி நேரில் ஆய்வு!!

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம், இனாம்குளத்தூர் ஊராட்சியிலுள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. இங்கு பெரியாரின் உருவ சிலை இருந்து வந்தது. இந்நிலையில் மர்ம நபர்கள் காவி சாயம் பூசி , செருப்பு மாலை அணிவித்துள்ளனர்.

இதனால் இனாம்குளத்தூர் சமத்துவபுரம் பகுதியில் மிகுந்த பரபரப்பு காணப்படுகிறது. இனாம் குளத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜெயராம் மற்றும் திருச்சி மாநகர காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். பெரியார் சிலை சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை மற்றும் காவி சாயம் பூசியதை கண்டித்து திருச்சி திண்டுக்கல் சாலையில் திராவிடர் கழகத்தினர் திமுகவினர் பொதுமக்கள் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளை பலப்படுத்தி 50க்கும் மேற்பட்ட போலீஸார் குவிந்துள்ளனர்.