மணப்பாறை அருகே திமுகவினரால் பல கோடி ரூபாய் மதிப்பிலான செம்மண் கொள்ளை

மணப்பாறை அருகே திமுகவினரால் பல கோடி ரூபாய் மதிப்பிலான செம்மண் கொள்ளை

மணப்பாறை அருகே திமுகவினரால் பல கோடி ரூபாய் மதிப்பிலான செம்மண் கொள்ளைபுகார் அளித்த விவசாய சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் .

முதவ்வர் நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்டமன்றத்தில் சாகும் வரை தண்ணீர் இன்றி உணவருந்தா போராட்டம் -விவசாய சங்கம் எச்சரிக்கை 

திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு திருச்சி மணப்பாறை ,ஸ்ரீரங்கம் பகுதிகளிலிருந்து ஏராளமான விவசாயிகள் தங்கள் குறைகளை பதிவு செய்தனர்.இந்நிலையில் ம.ப.சின்னதுரை தமிழக விவசாய சங்க மாவட்ட தலைவர் புகார் அளித்தார். அந்த புகாரில்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள மொண்டிபட்டி மற்றும் பெரிய பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் அப்பகுதி திமுக ஒன்றிய செயலாளர் ஆரோக்கியசாமி என்பவர் அரசு அனுமதியின்றி பல்வேறு விவசாயிகளின் விளைநிலங்களை மிரட்டி செம்மண் தோண்டி எடுத்து வருகிறார்.இது தொடர்பாக கனிமவளத்துறை, மாவட்ட ஆட்சியர், முதலமைச்சரின் தனிப்பிரிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கும் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.புகார் அளித்த காரணத்தால்

 கைபேசியில் கொலை மிரட்டல் விடுவதாகவும் அந்தப் பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளின் விலை நிலங்களை மிரட்டி அடிமாட்டு விலைக்கு வாங்கி அந்த நிலத்தில் உள்ள செம்மண் குன்றுகளை ஜேசிபி மூலம் இரவு பகல் பாராமல் டிப்பர் லாரிகள் மூலம் மண் கொள்ளை அடிக்கின்றனர். குறிப்பாக பெரியபட்டி கிராமத்தில் 2 மீட்டர் ஆழத்திற்கு கனிம வளம் கொள்ளையடிக்கப்படுகிறது.இந்த மணல் கொள்ளையால் அப்பகுதி வழியாக மற்ற விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு செல்ல முடியாமல் முடங்கிப் போய் உள்ளனர்.இதே போல திமுகவினர் ஏரி பாசன வாய்க்க்கால்களையும் ஆக்கிரமித்து வரும் நிலையில் தற்போது மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த பல மாதங்களாக மணப்பாறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் செம்மண் உள்ளிட்ட கனிம வளங்கள

 கொள்ளையடிக்கப்பட்டதால் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக முதலமைச்சர் உடனடியாக இந்த மணல் கொள்ளையர்கள் மீது நடவடிக்கையை எடுத்து கொள்ளை அடிப்பதை தடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டமன்ற அலுவலகத்தில் சாகும் வரை உண்ணா நிலை போராட்டம் இருக்கப் போவதாக சின்னதுரை எச்சரித்தார்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய

https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

திருச்சி விஷன் செய்திகளை telegram மூலம் அறிய

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision