தமிழக முழுவதும் தமிழக அரசு சார்பில் நலன் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டத்தின் கீழ் உயர்தர மருத்துவ முகாம்கள் 17 மருத்துவத் துறைகளைக் கொண்டு கட்டணம் இல்லாமல் சேவை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக இன்று திருச்சி பொன்மலைபட்டியில் உள்ள
திரு இருதய மேல்நிலைப்பள்ளியில் மக்கள் நலன் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன். தமிழ்நாடு முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் 1256 முகாம்கள் அறிவிக்கப்பட்டு. இதுவரை 1076 முகாம்கள் நடைபெற்றுள்ளது.
மற்றவை பிப்ரவரி 3வது வாரத்திற்குள் முழுமையாக நிறைவடையும்.
இந்த முகாம்களில் தமிழகம் முழுவதும் இதுவரை 16,16,517 பேர் பயனடைந்துள்ளனர். முகாம்களில் 56,092 மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வகையான சான்றிதழ்களும் இந்த முகாம் மூலமாக மாற்றுத்திறனாளி
வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்திற்கு கீழ் இது வரை ஒரு கோடியே 40 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்பெற்றுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் 46முகாம்கள் நடத்த நிர்ணயிக்கப்பட்டதில் 34முகாம்கள் நிறைவடைந்து. இன்று 35 வது முகாம் நடைபெற்று வருகிறது. இதுவரை 54,454 பேர் பயனடைந்துள்ளனர்.
திமுக அரசு பொறுப்பேற்றதற்கு முன்பு வரை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் 17ஆக இருந்தது திமுக அரசு பொறுப்பேற்ற பின் 19மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது.
வரும் 6 ஆம் தேதி ஒரே நாளில் 7இடங்களில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை முதலமைச்சர் திறந்து வைக்கிறார்கள்.
23 ஊர்களில் கட்டப்பட்ட மருத்துவமனை கட்டிடங்களை திறந்து வைக்கிறார். 10 இடங்களில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களையும் திறந்து வைக்கிறார்கள்.
திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 110 கோடியில் புதிய மருத்துவமனை கட்டிடம் 25கோடியில் அதிநவீன மருத்துவ உபகரணங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
புற்று நோய் கண்டறியும் பெட் எனப்படும் ஸ்கோன் திருச்சி மருத்துவமனையில் பொடுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு அல்லது மூன்று வார காலத்திற்குள் அந்த பணிகள் முடிவடைந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவித்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision



Comments