திருச்சி பஞ்சப்பூரில் ரூ.408.36 கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கடந்த 16-ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. அப்போது, பயன்பாட்டிற்கு திறந்து வைத்த நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களும், மாவட்ட ஆட்சியர் அவர்களும் பழைய பேருந்து கட்டணமே வசூலிக்கப்படும் என்று அறிவித்த நிலையில் கடந்த 4-நாட்களாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் பஞ்சப்பூர் வரை ரூ.15/- என பயணச்சீட்டு வழங்கப்படுகிறது. 1 முதல் 5 வரையிலான பேருந்து நிறுத்தங்களில் நின்று செல்லும் (Bye Pass Rider) பேருந்துகள் (1 To 5) ஏற்கனவே வசூலிக்கப்பட்ட கட்டணத்தைவிட கூடுதலாக ரூ.5/- வசூலிக்கப்படுகிறது. இடைநில்லா பேருந்துகள் (ITo 5) ரூ.5/- கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.
திருச்சியிலிருந்து புதுக்கோட்டை சென்ற A/C பேருந்துகள் ரூ.60/-க்கு பதிலாக ரூ.70/-ம் வசூல் செய்யப்படுகிறது. சாதாரண கட்டண பேருந்துகளில் ரூ.47/-க்கு பதில் ரூ.52/-ம், ரூ.52/-ம், இடைநில்லா புறநகர் பேருந்துக்கு ரூ.50/-க்கு பதில் .55/-வசூலிக்கப்படுகிறது. நகரப்பேருந்துகளில் சத்திரம் முதல் ஜங்சன் வரை ரூ.10/-வசூலிக்கப்பட்ட நிலையில், பஞ்சப்பூருக்கு கூடுதலாக சேர்த்து ரூ.15/- வசூலிக்கப்படுகிறது.
இதனால், தினக்கூலி தொழிலாளர்கள், பணிபுரியும் பெண்கள், ஆண்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதோடு, கூடுதலாக நிதி சுமையும் ஏற்படும். எனவே, கூடுதல் கட்டணங்கள் உயர்வை திரும்ப பெற்று பழைய கட்டணத்தையே வசூல் செய்ய உத்தரவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.சிவா திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்துள்ளார்.
Comments