Wednesday, September 10, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி அருகே ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டி ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சியினர் மனு!

திருச்சி திருவெறும்பூர் நாம் தமிழர் கட்சியினர் சார்பாக ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் ரயில்வே சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Advertisement

அந்த மனுவில்…. திருவெறும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சியில் ஏறக்குறைய 20000 நபர்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சி நன்கு வருவாய் மிக்க முதல்நிலை ஊராட்சியாக இருந்தும் இதுநாள் வரை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கவில்லை என்றும், பெண்கள் மகப்பேறு காலத்திலும் வயதானவர்களுக்கு திடீர் உடல்நிலை குறைவு ஏற்பட்டாலும் சுமார் 8 கிலோமீட்டர் பயணம் செய்து மருத்துவம் பார்க்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும்,

இது குறித்து எங்களது ஊராட்சியில் நடந்த கிராம சபை ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளதாகவும் கடந்த டிசம்பர் 2019 ஆம் ஆண்டு ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்டத்தில் தங்கள் பகுதிக்கு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் ஒரு வருடமாகியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், உடனடியாக கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் நாம் தமிழர் கட்சி சார்பாக மனு அளிக்கப்பட்டது.

Advertisement

இதில் நாம் தமிழர் கட்சி திருவெறும்பூர் தொகுதி இணைச் செயலாளர் நா.நாகேந்திரன், ஊராட்சி தலைவர் ராஜேஷ் விஜய் ஆனந்த், மற்றும் ஊராட்சி செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *