முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி தனது மகனை மூன்று மாத கால பரோலில் அனுப்ப வேண்டும், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில் தனது கோரிக்கையை நிறைவேற்ற பரிந்துரை செய்யுமாறு திருச்சிக்கு வந்த ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி, திமுக முதன்மை செயலாளரும், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சருமான கே.என்.நேருவிடம் மனு அளித்தார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision







Comments