Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் ஸ்டிேயோ, கலர்லேப் தொழில் நிறுவனங்கள் திறக்க அமைச்சர் கே.என்.நேருவிடம் மனு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் திருச்சி மாவட்ட வீடியோ மற்றும் போட்டோகிராபர் சங்கத்தினர்
மனு அளித்தனர். அதில் திருச்சி மாவட்ட வீடியோ, போட்டோ சங்க உறுப்பினர்கள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை வைத்து தொழில் நடத்தி வருகின்றனர்.

தற்பொழுது தமிழக அரசு அறிவித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கில் எங்கள் தொழில் குறித்து எந்த அறிவிப்பும் இல்லை. எங்கள் தொழில் சார்ந்த தொழிலாளர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். 

திருச்சி மாவட்டம் ( துறையூர், மணப்பாறை, லால்குடி, திருவெறும்பூர், முசிறி, துவரங்குறிச்சி ) திருச்சி மாநகர் பகுதியில் குறிப்பாக சிங்காரந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் கலர் லேப், போட்டோ, ஸ்டூடியோ தொடர்பான நிறுவனங்கள் திறப்பதற்கு தாங்கள் தயவு கூர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர், மாநகரப் போலீஸ் கமிஷனர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோருக்கு போட்டோ மற்றும் வீடியோ தொடர்பான கடைகள் திறப்பதற்கு அனுமதி பெற்றுத் தரும்படியும் கேட்டுக்கொள்கிறோம். 

பொதுமக்கள் கூடுவதற்கு சத்தியக் கூறுகள் எங்கள் நிறுவனங்களில் இல்லை. இருப்பினும் அரசு விதித்துள்ள கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து வீடியோ போட்டோ தொடர்பான கடைகளை திறந்து தொழில் நடத்த அனுமதி பெற்றுத் தரும்படி மிகத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *