தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்மேல் மகேஷ் பொய்யாமொழியை ட்விட்டர் கணக்கில் அவதூராகவும் உண்மைக்கு மாறான பொய்யான கற்பனை செய்யப்பட்ட ஒரு படங்களை தமிழ்நாடு பிஜேபி தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளதையும் மேலும் அண்ணாமலை பேசுவது போல் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் செய்து கோடிக்கணக்கான சொத்து வைத்து இருந்ததாகவும் ஒரு வீடியோ வெளியிட்டு அதில் அமைச்சரின் அன்பின் மகேஷ் பொய்யாமொழி பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் வெளியிட்டு இருந்தது.

இதனைபார்த்து திருச்சியை சேர்ந்த வழக்கறிஞர் முரளிதரன் இன்று திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து உண்மைக்கு மாறாக பொய் செய்தியை பரப்பிய பிஜேபி தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்ககோரி புகார் மனு அளித்துள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP



            
            
            
            
            
            
            
            
            
            
Comments