திருச்சி மாவட்டம் அல்லூர் ஊராட்சியில் மூன்று பேஸ் மின்சாரம் மிக மிக குறைவாக இருப்பதால், மின்வினியோகம் தடைபடுகிறது. அதுமட்டுமின்றி பொதுமக்களுக்கு மின்வினியோகம் குறைவாக கிடைக்கின்றது. இதனால் குடிநீர் விநியோகமும் தடைபடுகிறது. இதனை சரி செய்யும் விதத்தில் பொதுமக்கள் சார்பாக இன்றைக்கு மாவட்ட ஆட்சித் தலைவரிடம் சமூக ஆர்வலர் நவநீதன் மனு அளித்துள்ளார்,
இதுகுறித்து அவர் கூறுகையில்… கம்பரசம்பேட்டையில் இருந்து மின் இணைப்பு வழங்கப்பட்டபோது மின் விநியோக எவ்வித தடங்கலும் இல்லாமல் பொது மக்களுக்கு மின்சாரம் கிடைக்கப் பெற்றது. ஆனால் தற்போது சிறுகமணி பெட்டைவாய்தலை பகுதியில் இருந்து மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால் அதிக அளவில் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். அதுமட்டுமின்றி அல்லூர் மேலத்தெரு டிரான்ஸ்பார்மர் 250kv அமைக்கப்பட்டால் மட்டுமே குடிநீர் விநியோகம் தடை இன்றி மக்களுக்கு கிடைக்கும்.
இரவு பகல் என்ற பாகுபாடின்றி அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. எனவே இதனை சரி செய்து மின்சாரம் தடையின்றி கிடைப்பதற்கான பணியை விரைவில் செயல்படுத்த மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பாக கோரிக்கை வைத்துள்ளேன் என்றும் கூறினார். மேலும் குடிநீர் விநியோகம் தடை இல்லாமல் கிடைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments