திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த கல் லூர்பட்டி கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் ராம்குமார் (34). ஏலச்சீட்டு மற்றும் பைனான்ஸ் நடத்தி வருகிறார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக காவல் கட்டுப் பாட்டு அறைக்கு ராம்குமார் தகவல் தெரிவித்தார்.

அதன் பேரில் திருச்சி ஏடிஎஸ்பி குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்ட போது ராம்குமார் வீட்டு முன் பாட்டில் உடைந்து எரிந்து கிடந்தது தெரியவந்தது.

கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? அல்லது வரவு செலவு பிரச்னையில் வீசப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் ராம்குமாரிடம் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரப ரப்பு ஏற்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision




            
            
            
            
            
            
            
            
            
            


Comments