5 மாதங்களுக்குப் பிறகு செல்லப்பிராணிகள் விற்பனை - களைகட்டிய பொன்மலை சந்தை!!

5 மாதங்களுக்குப் பிறகு செல்லப்பிராணிகள் விற்பனை - களைகட்டிய பொன்மலை சந்தை!!

திருச்சியின் சுற்றுவட்டார பகுதிகளான திங்கட்கிழமை என்றால் விராலிமலை சந்தை, புதன்கிழமை என்றால் மணப்பாறை சந்தை, சனிக்கிழமை என்றால் சமயபுரம் சந்தை, இந்த வரிசையில் ஞாயிற்றுக்கிழமை என்றால் எப்போதும் கலைக்கட்டி காணப்படும் பொன்மலை சந்தை சற்று வித்தியாசமாக திருச்சியில் உள்ள செல்லப்பிராணிகளை வாங்கி வளர்ப்பவர்களுக்கும், அவற்றை வேடிக்கை பார்த்து ரசித்து சிரித்து கொஞ்ச நேரத்தை செலவிட நினைத்து ஞாயிற்றுக்கிழமை என்றால் பொன்மலை நோக்கி படையெடுக்கும் பயணங்கள் இன்றும் இன்றளவும் இருந்து வருகின்றன.

அந்தவகையில் கடந்த 5 மாதங்களாக ஊரடங்கு காரணமாக பொன்மலை சந்தை இயங்காமல் இருந்தது. கடந்த 5 மாதங்களுக்கு பிறகு இன்று பொன்மலை சந்தை ஜெகஜோதியாக களைகட்டி காணப்பட்டது. இங்கு ஏராளமான வீட்டு உபயோக பொருட்கள், காய்கறிகள் மற்றும் செல்லப்பிராணிகளின் விற்பனைகள் இன்று நடைபெற்றது.

Advertisement

கொரோனா ஊரடங்கு பிறகு இன்று நடைபெற்ற இந்த சந்தையில் பலர் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக் கொண்டும் திருச்சியின் முன்னுதாரணமாக செயல்படும் பொன்மலை சந்தை 5 மாதங்களுக்குப் பிறகு இன்று நடைபெற்றது பலரின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்துள்ளது

https://youtu.be/Jvx_Piv60ks
Advertisement