வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒவ்வொருவருக்கும் தனித் திறமை இருந்தபோதிலும் ஒட்டுமொத்தமாக எல்லோரும் விரும்பும் ஒரு துறையாக புகைப்படத் துறை இருந்துகொண்டிருக்கிறது தொழில்நுட்பங்களும் அதற்கு உதவுகின்றன அந்த வகையில் பள்ளி மாணவர்களிடம் இருக்கும் புகைப்பட திறமையை வெளிக்காட்டும் விதமாக,
கேர் காலேஜ் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியின் காட்சி தொடர்பு துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான புகைப்பட போட்டி நடைபெற இருக்கிறது.
இப் போட்டியில் பங்குபெற விரும்பும் போட்டியாளர்கள்தங்களுடைய படைப்புகளை ஜூலை 15-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.போட்டியில் பங்கு கொள்ளும் பங்கேற்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள்:-
மூன்று பிரிவுகளில் கீழே போட்டியானது நடத்தப்பட இருக்கிறது .
Nature /Abstract
People/streetlife
Phonephotography
தமிழகத்தில் உள்ள 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இப்போட்டியில் பங்கு பெறலாம்.
டிஜிட்டல் கேமரா ,டிஎஸ்எல்ஆர் மொபைல் கேமரா எதைவேண்டுமானாலும் போட்டியாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
முதல் இரண்டு பிரிவுகளில் பங்குபெறும் போட்டியாளர்கள் எந்த வகை கேமராக்களை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் ஆனால் மூன்றாவது வகை பிரிவினர் கண்டிப்பாக மொபைல் போன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
மூன்றாவது பிரிவில் போட்டியிடும் போட்டியாளர்களின் புகைப்படங்கள் குறைந்தது ஒரு எம்பி(1MB) அளவிற்கு இருக்கவேண்டும் அதிகபட்சமாக எத்தனை எம்பி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
புகைப்படங்கள் கண்டிப்பாக கொடுக்கப்பட்ட கருப்பொருள் அமைவது அவசியமானது. தேர்ந்தெடுக்கப்படும் புகைப்படங்கள் பரிசளிப்பது கருப்பொருளை மையமாகக் கொண்டு மதிப்பிடப்படும்.போட்டியில் பங்கு பெறுபவர்கள் வேறு எந்த போட்டிகளிலும் இதற்கு முன்பு வெற்றி பெற்றவர்களாக இருத்தல் கூடாது.
வெற்றியாளர்களின் விவரங்கள் ஜூலை மாதத்தின் இறுதியில் வெளியிடப்படும்.ஒவ்வொரு பிரிவிலும் 2 வெற்றியாளர்கள் மூன்று சிறந்த பங்களிப்பாளர்கள் காண பரிசுகள் வழங்கப்படும். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்படும்.
போட்டியில் பங்கு பெறுபவர்கள் கண்டிப்பாகப் பள்ளியில் படிப்பதற்கான bonafide சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களையும் போட்டி குறித்த தகவல்களை பெற www.care.ac.in/arts என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் மேலும் கல்லூரியின் சமூக வலைதளங்களில் போட்டி குறித்த தகவல்களை பெறலாம்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
Comments