திருச்சியில் உறையூர் எடத்தெரு மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம் திருவானைக்கோவில் நண்பர்கள் நடத்தும் திருச்சியில் மாநகர மாபெரும் புறா பந்தய போட்டி கர்ண புறா, சாதா புறா கூட்டு போட்டிகளும் திருவானைக்காவல் உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இன்று சாதா புறாக்கள்  போட்டி நடைபெற்றது. காலை 7 மணிக்கு புறப்பட்டு மதியம் 2 மணிக்கு புறா விட்டவர்கள் வீட்டில் சரியாக வந்து அமர வேண்டும். 7 மணி நேரம் புறா பந்தயம், ஒவ்வொரு மணி நேரம் தனது புறாவை நடுவர்களுக்கு காண்பிக்க வேண்டும். 25த்திற்க்கும் ஜோடி புறாக்கள் இப்போட்டியில் கலந்து கொண்டுள்ளன .உறையூர் மலைகோட்டை பகுதியிலிருந்தும் புறாக்கள் போட்டியில் பங்கேற்றது. இறுதியாக இப்போட்டியில் வெற்றி பெறும் புறாவிற்க்கு முதல்  பரிசாக ரூ 12,001 வழங்கப்படுகிறது.
முன்னதாக இப் போட்டியில் பங்கேற்பவர்கள் நுழைவுக் கட்டணமாக ரூபாய் 2500 செலுத்த வேண்டும். போட்டியின் விதிமுறைகள் அனைத்தும் போட்டி பொறுப்பாளர்கள் காகிதங்களில் அச்சடித்து  பங்கேற்பவர்ளுக்கு கொடுத்துள்ளனர். புறா பந்தய
போட்டியின் தலைவராக பாபா பாலாஜி உள்ளார். இப்போட்டிகளை திருவானைக்காவல் ஸ்ரீரங்கம் பகுதி பெரியசாமி, ராஜ்குமார், ஜாக்கி சரவணன் மலைக்கோட்டை பகுதி ரட்சகன் எடத்தெரு பகுதி கண்ணாடி மாரிமுத்து, உறையூர் பகுதி கந்தன், செல்வம், சங்கர் ஆகியோர் செய்திருந்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS
#டெலிகிராம் மூலமும் அறிய….. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments