திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பராமரிப்பின் கீழ் இயங்கி வரும் பொது தரை மட்ட கிணறு நீர் உந்து நிலையத்திலிருந்து உந்தப்படும் பிரதான குழாயில் சங்கிலியாண்டபுரம் பிச்சை நகர் அருகில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் இப்பணியினை மராமத்து செய்யும் பணி (16.11.2022) அன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
இதனால் தேவதானம், விறகுபேட்டை புதியது, கல்லுக்குழி புதியது, கல்லுக்குழி பழையது, ஜெகநாதப்புரம் புதியது, ஜெகநாதப்புரம் பழையது, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, சங்கிலியாண்டபுரம் புதியது, சங்கிலியாண்டபுரம் பழையது மற்றும் மகாலட்சுமி நகர் ஆகிய 10 மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டிகள் மூலம் வழங்கப்படும் பகுதிகளுக்கு

(17.11.2022) குடிநீர் விநியோகம் இருக்காது. (18.11.2022) அன்று வழக்கம் போல் குடிநீர் விநியோகம் நடைபெறும். இதனால் பொதுமக்கள் குடிநீரை சேமித்து சிக்கனமாக பயன்படுத்தி மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறு மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments