திருச்சி மாவட்டம் பாகனூர் ஊராட்சியில் உள்ள 93 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில் 5000 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் பனை விதைகளை நட்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் உள்ள 50க்கும் மேற்பட்ட பணியாளர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டு பனை விதைகளை நட்டனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்ட ஆட்சியர்…… திருச்சியில் உள்ள குளங்களில் கருவேல மரங்களை அகற்றும் விதமாகவும், நிலத்தடி நீர்மட்டத்தை சேமித்து வைக்கும் பொழுது குளங்கள் கரையோரங்களில் பனை விதைகள் நடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஷைன் திருச்சி என்ற தன்னார்வ அமைப்புடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து பாகனூர் கிராமத்தில் உள்ள குளத்தில் ஐந்தாயிரம் பனை விதைகள் நடும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 400 ஏக்கர் பரப்பளவில் பனை விதைகள் நடப்பட்டுள்ளன. பனைமரம் மாநில மரம் மட்டுமல்ல நீரை சேமித்து வைக்கக்கூடிய மரம் .போதிய விழிப்புணர்வு இல்லாததால் பனை விதைகள் செங்கல் சூளைக்கு கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளது.
இதனை மாற்றுவதற்காக பனை விதை குறித்த விழிப்புணர்வை மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பனை விதைகளை நடும் முயற்சியில் தன்னார்வர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அவர்களோடு மாவட்ட நிர்வாகம் இணைந்து மாவட்டம் தோறும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தி வருகிறது என தெரிவித்தார். இதற்கிடையில் இந்த பனை விதை நடும் நிகழ்ச்சியில் பாதுகாப்பிற்கு வந்த காவல்துறையினரும் ஆர்வத்துடன் பனை விதைகளை நட்டு சென்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO




            
            
            
            
            
            
            
            
            
            


Comments