திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி ஒன்றியம் கருங்குளம் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில், புனித அந்தோனியார் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற தை மாதம் 15 ஆம் நாள் ஜனவரி 29-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்துவதாக விழா கமிட்டினர் முடிவுசெய்துள்ளனர். அதற்கான அனுமதிக்கு மாவட்ட ஆட்சித்தலைவருக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து பெரியதனம் சி.அந்தோனி தலைமையில், ஆலய வளாகத்தில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ஊர் முக்கியஸ்தர் வி.ஏனோக், மணியம் சேசுராஜ், ஆலோசகர் பி.ஏ.ரத்தினம், பொருளாளர் அமுல் ஆசிரியர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn







Comments