தமிழ்நாட்டில் ப்ளக்ஸ் வைப்பதை முழுமையாகத் தடை செய்யும் வகையில், உரிய விதிகளை வகுக்க வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பேனர்கள், ப்ளக்ஸ், விளம்பர பலகைகள் வைக்க தமிழ்நாடு அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி விதிமீறலினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் விதிமுறைகள் மீறி பிரமாண்ட பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள கோரிமேடு பகுதியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி எம்பி அருண் நேரு தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து சாலை ஓரம் ப்ளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது. இந்த ப்ளக்ஸ் காற்றில் சரிந்தது எப்போது வேண்டுமானாலும் சாலையில் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிமீது விழும் அபாய நிலையில் காட்சி அளித்தது.

இதனால் நடந்து செல்பவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவ்வழியே அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக ஆளும் கட்சியை சேர்ந்த திமுகவினரே விதிமுறைகளை மீறி பிளக்ஸ் வைக்கலாமா என வாகன ஓட்டிகள் புலம்பி கொண்டு சென்றனர்.

எனவே அசம்பாவிதம் ஏற்படும் முன் ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த விளம்பர பேனர்கள், ப்ளக்ஸ்களை வைப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision







Comments