செப்டம்பர் 26ஆம் தேதி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெறவுள்ள “உரிமையை மீட்போம் – தமிழகத்தை காப்போம்” நடைப்பயணம் மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் சிறப்பாக நடைபெறவுள்ளது.இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு,

பாமக ஒன்பது தொகுதி நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மாநில வன்னியர் சங்க செயலாளர் மற்றும் பாமக இணைப் பொதுச் செயலாளர் க. வைத்தி தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்கச் செய்வது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.கூட்டத்தில் உரையாற்றிய நிர்வாகிகள் இந்த பொதுக்கூட்டம் சாதாரண ஒன்று அல்ல இது தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் தொடக்கமாக அமையும்” என வலியுறுத்தினர்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் திலீப் குமார், உமாநாத், கருணாநிதி, பிரின்ஸ் உள்ளிட்டோர், பாமக நிர்வாகிகள், மகளிர் அமைப்புப் பொறுப்பாளர்கள் மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments