திருவெறும்பூர் அருகே கள்ள சந்தையில் அரசு மதுபான பாட்டில்களில் போலி மது விற்பதற்காக கொண்டு சென்றவரை துவாக்குடி போலீசார் கைது செய்தனர்.
திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் கீழ மாங்காவனம் பகுதியில் ரோந்து சென்றப் போது அந்த வழியாக சாக்கு மூட்டையுடன் சந்தேகப்படும்படியாக வந்தவரை மணிவண்ணன் பிடித்து அவரது சாக்கு மூட்டையை அவிழ்த்து பார்த்தப்போது சாக்கு மூட்டைக்குள் துர்நாற்றத்துடன் அரசு மதுப்பான பாட்டில்கள் சீல் உடைக்கப்பட்டு அதில் போலி மது நிறப்பபட்டிருந்தது தெரிய வந்தது.
அதன் அடிப்படையில் அவரை பிடித்து மணிவண்ணன் விசாரித்த போது பூதலூர் வெண்டையம் பட்டி வடக்கு தெருவை சேர்ந்த வெங்கடாசலம் (50 )என்பதும் அரசு அனுமதி இல்லாமல் அரசு பாட்டில்களில் போலி மதுவை அடைத்து வைத்து விற்க இருப்பது தெரிய வந்தது.
வெங்கடாசலம் வைத்திருந்த சாக்கு முட்டையில் இருந்து 80 மது பாட்டில்களை பறிமுதல் செய்ததோடு வெங்கடாசலத்தின் மீது துவாக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சி 6வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிபதி உத்தரவின் படி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments