போலீஸ் காலனி ஞானவிநாயகர் ஆலயம் அஷ்டவந்தன மகா கும்பாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியில் எழுந்தருளி தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு வேண்டுவன எல்லாம் தந்து அருள்பாலித்துவரும் அருள்மிகு ஞானவிநாயகர் ஆலய அஷ்டபந்தன மகா சம்ரோக்ஷணம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
கடந்த நான்காம் தேதி காவிரியில் இருந்து புனிதநீர் எடுத்துவரப்பட்டு, வாஸ்து சாந்தி, புண்யாஹவாசனம், கணபதிஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கி நடைபெற்றுவந்தது.இன்றைய தினம் நான்காம்கால யாகசாலை பூஜைகள் பூர்ணாஹூதியுடன் நிறைவுபெற்று, யாகசாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்கள் மேளதாளங்கள் முழங்க எடுத்துச்செல்லப்பட்டு, பின்னர்
சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க, ராஜகோபுரம் மற்றும் ஞான விநாயகர் கோயில் மூலஸ்தான விமானம், ஏனையபரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தேறியது. அதனைத்தொடர்ந்து மூலவர் விக்கிரகங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இதில் போலீஸ் காலனி, அண்ணாநகர், நவல்பட்டு, சோழமாதேவி நகர், மாத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
Comments