காணாமல் போன 130 செல்போன்களை கண்டு பிடித்த காவல்துறையினர்- மகிழ்ச்சியுடன் திரும்பப் பெற்று சென்ற தவறவிட்டோர்!

காணாமல் போன 130 செல்போன்களை கண்டு பிடித்த காவல்துறையினர்- மகிழ்ச்சியுடன் திரும்பப் பெற்று சென்ற தவறவிட்டோர்!

திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் செல்போன்கள் காணாமல் போனதாக அளிக்கப்பட்ட 130 புகார்களின் அடிப்படையில் திருச்சி மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்பேரில் 130 செல்போன்களும் கண்டுபிடிக்கப்பட்டு அதன் உரிமையாளர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்கு என தனிப்படை அமைக்கப்பட்டு, சைபர் கிரைம் பிரிவு,கோட்டை மற்றும் கண்டோன்மெண்ட் காவல் சரகம் பிரிவு காவலர்கள் பல்வேறு இடங்களில் காணாமல் போன செல்போன்களை மீட்டனர்.

மீட்கப்பட்ட செல்போன்கள் புகாரின் அடிப்படையில் யாருடையது என கண்டுபிடிக்கப்பட்டு உரிமையாளர்களுக்கு நேற்று தகவல் கொடுக்கப்பட்டு இன்று வந்து பெற்றுக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது.

செல்போன் கடை உரிமையாளரிடம் ஒப்படைத்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணாமல் போன 130 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், செல்போன்களை தவறவிட்டவர்கள் தவிர்த்து மக்களிடமிருந்து திருடியவர்கள் கண்டறிந்து 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் திருட்டு சம்பவங்கள் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும் சைபர் கிரைம் துறையை மேம்படுத் அதற்கு ஆவன செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

Advertisement

செல்போன்களை தவறவிட்டு புகார் அளித்து, தற்போது பெற்றுள்ள புகார்தாரர்களுடைய செல்போன் எண்களை வைத்து வாட்ஸ்அப் குரூப் ஒன்று அமைக்கப்படும் என்றும், மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சுமூக உறவு ஏற்படும் வகையில் விழிப்புணர்வு, புகார்கள் உள்ளிட்டவை தெரிவிக்கும் வகையில் வாட்ஸ் அப் குரூப் அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

t