திருச்சி பொன்மலை பகுதியில் பெண் தபால்காராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று பொன்மலை யானை பூங்கா அருகே தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது வழிமறித்து அவர் மார்பகம் மீது கை வைத்து விட்டு போலீஸ்காரர் ஒருவர் ஓடி சென்று விட்டார். போஸ்ட்மேன் பொன்மலைக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பிறகு விசாரணை மேற்கொண்ட போது திருச்சி மாவட்டம் காணக்கிளியநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரியும் கோபாலகிருஷ்ணன்
இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது.பின்னர் அவர் மீது வழக்கு பதிந்து கைது செய்யப்பட்டு
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments