தமிழர் திருநாளாம் “பொங்கல்” பண்டிகையை முன்னிட்டு, திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை வளாகத்தில் “பொங்கல் விழா” இன்று(14.01.2026)-ந்தேதி காவல் அதிகாாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் காவல்துறையினரின் குடும்பத்தினருடன் நடைபெற்றது. இப்பொங்கல் விழாவில் திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி,இ.கா.ப., அவர்கள் கலந்து கொண்டும், பொங்கல் வைத்து கொண்டாடியும் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்கள்.

பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக காவல்துறையை சார்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் காவலர்களின் குழந்தைகளுக்கு என தனித்தனியாக வயது வாரியாக 20 மீட்டர், 30 மீட்டர், 75 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், சைக்கிள்ரேஸ், Lemon & Spoon, பந்து எறிதல், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், கோலப்போட்டி, மியூச்சிக்கல் சேர், கயிறு இழுத்தல், சாக்கு போட்டி, கபாடி

போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாலை 0700 மணிக்கு மாநகர காவல் ஆணையர் அவர்கள் பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
இவ்விழாவில் திருச்சி மாநகர காவல் உயரதிகாரிகள் மற்றும் காவலர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினருடன் பாரம்பரிய உடையில் கலந்து கொண்டார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision https://www.threads.net/@trichy_vision



Comments