திருச்சி மருதாண்டகுறிச்சி பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் நேற்று (05.11.2021) திருச்சி என்.எஸ்.சி போஸ் ரோட்டில் வீட்டு உபயோக பொருட்களை வாங்குவதற்கு தன் தாய் தந்தையுடன் சென்று உள்ளார். மீண்டும் வீடு திரும்புவதற்கு ஓலா ஆட்டோ புக் செய்துள்ளார். மறுமுனையில் பேசிய ஓலா ஆட்டோ டிரைவர் ராஜவேல் எவ்வளவு ரூபாய் காட்டுகிறது என கேட்ட போது 90 ரூபாய் காட்டுவதாக தர்மராஜ் குறிப்பிட்டார். 120 ரூபாய் வேணும் என கேட்டுள்ளார் தருகிறேன் என இவர் ஒப்புக்கொண்டுள்ளார் .
 ஆனாலும் அவர் கோட்டைவாசல் முன்னதாக உள்ள சர்ச் வாசலில் ஆட்டோ வந்து ஏற்ற முடியாது. நீங்கள் எதிர்புறம் உள்ள 200 மீட்டர் தாண்டி உள்ள சாலையை கடந்து வந்த நில்லுங்கள் என உத்தரவிட்டுள்ளார். என் தாய் தந்தை வயதானவர்கள் அவர்களால் நடக்க முடியாது என தர்மராஜ் குறிப்பிட  அதை ஆட்டோ ஓட்டுநர் காதில் வாங்காமல் ஆபாச வார்த்தைகளில் திட்டி தீர்த்துள்ளார். உங்களுக்கெல்லாம் எதற்கு ஓலா ஆட்டோ என அவரையும் அவர் குடும்பத்தையும் திட்டியுள்ளார்.

 இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தர்மராஜ் ஓலா ஆட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு புகார் தெரிவித்தார். அது மட்டுமல்லாமல் காவல்துறைக்கும் முதல்வரின் தனி பிரிவிற்கு ட்விட்டர் மூலம் புகார்களை அனுப்பியுள்ளார். தொடர்ந்து ஓலா ஆட்டோவில் வரும் ஆட்டோ டிரைவர்கள் பயணிகளிடம் தகாத வார்த்தைகளை பயன்படுத்துவதாகும் அடிக்கடி கேன்சல் செய்யுங்கள் என வற்புறுத்துவதும்  தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் என்னால் வர முடியவில்லை என்றால் கேன்சல் செய்து விடுகிறேன் என்று சொன்னதற்கும் அவர் கேட்காமல் மேலும் மேலும் ஆபாச வார்த்தைகளில் திட்டி உள்ளார் .இவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனவேதனையுடன் குறிப்பிட்டார்.

அவசரத் தேவைக்கு ஆட்டோ புக் செய்து தங்களுக்கு மன நிம்மதி இழந்து மன உளைச்சலுக்கும் ஆளாவது இவரைப் போன்ற ஓட்டுநர்களால் என வருத்தம் தெரிவிக்கின்றனர் பயணிகள். மேலும் ஓலா ஆட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் கொடுத்தற்க்கு அவருக்கான சேவை இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/EtMAlm0CVDVGKgF2tRCUHW
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/Trichyvision
 
 30 Oct, 2025
30 Oct, 2025                           171
171                           
 
 07 November, 2021
 07 November, 2021

Comments