பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஷ்கார் விருது பல்வேறு இடர்களுக்கு இடையிலும் வீரமாகச் செயல்புரிந்த இந்திய சிறார்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இவ்விருது பெறுவதற்கான தகுதிகள் :
➢ இந்திய குடிமகன் / குடிமகளாக இருக்க வேண்டும்
➢ இந்திய நாட்டில் வசிப்பவராக இருக்க வேண்டும்
➢ 18 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
➢ விளையாட்டு சமூக சேவை அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் சுற்றுச்சூழல், கலை மற்றும் பண்பாடு போன்ற துறைகளில் சாதனைகள் புரிந்திருக்க வேண்டும்.
➢ தன் உயிருக்கு ஆபத்து நேரும் என்று அறிந்தும் தன்னலமற்ற சேவை புரிந்திருத்தல், மேலும் இயற்கை சூழல் அல்லது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட சூழ்நிலைகளுக்கு எதிராக சிறந்த தைரியம் கொண்டு புத்திசாலிதனமாக மற்றும் மனஉறுதியுடன் செயல்பட்டு சமூகத்திற்கு சேவை புரிந்திருக்க வேண்டும்.
இவ்விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். இணையதள முகவரி : https://awards.gov.in/விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : (31.08.2023) என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision







Comments