Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

கனமழை காலத்தில் தோட்டக்கலைப் பயிர்களுக்கான ஆயத்த நிலை ஏற்பாடுகள் –  திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழை காலங்களில் அதிக கன மழைக்கு வாய்ப்புள்ள நிலையில் அறுவடைக்குத் தயாராக உள்ள தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்த தோட்டங்களில் அறுவடை மேற்கொண்டு பயிர்களைப் பாதுகாக்க வேண்டும். மா, கொய்யா மற்றும் இதர பழப்பயிர்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்றி கவாத்து செய்வதன் மூலம் மரத்தின் சுமையை குறைத்து மழை மற்றும் புயல் காற்றில் இருந்து பாதுகாக்கலாம்.

மழைநீர் தேங்க வாய்ப்புள்ள நிலங்களில் ஆங்காங்கே வடிகால் வசதி செய்து மழைநீர் வெளியேறிய பின்னர், அடி உரமிட்டு மரத்தைச் சுற்றி மண் அணைத்தல் வேண்டும். காய்கறிப் பயிர்களில் காய்ந்து போன இலைகளை அகற்ற வேண்டும். இலைவழி உரமளித்து பயிரின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்தல் வேண்டும். குச்சிப் பந்தல் அமைத்து கொடிவகைக் காய்கறிப் பயிர் செய்வோர் மண் அணைத்தும்இ வலுவிழந்த பகுதிகளில் கூடுதல் ஊன்று கோல்கள் அமைத்து பந்தல் சாய்வதைத் தடுத்திடவும் வேண்டும்.

அதிக அளவில் பயிரிடப்படும் வாழைப் பயிர்களில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றி விட்டு மரத்தின் அடியில் மண் அணைத்தல் வேண்டும். சவுக்கு அல்லது யூக்கலிப்டஸ் கம்புகளை பயன்படுத்தி ஊன்றுகோல் அமைத்திட வேண்டும்.

பசுமைக்குடில் மற்றும் நிழல்வலைக் கூடாரத்தின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பசுமைக் குடிலின் உள்பகுதியில் காற்று உட்புகும் பகுதிகள் இல்லாததை உறுதி செய்து கொள்ள வேண்டும். பசுமைக்குடிலின் கட்டுமானத்திலுள்ள கிளிப்புகளை மாற்ற வேண்டும்.

பசுமைக்குடில் அருகில் பட்டுப்போன, காய்ந்து போன மரங்கள் மற்றும் கிளைகள் இருப்பின் அவற்றை கவாத்து செய்து பசுமைக்குடிலை பாதிக்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க பசுமைக் குடிலினைச் சுற்றி உயிர் வேலி அமைத்திட வேண்டும். இத்தகவலினைப் பின்பற்றி அனைத்து விவசாயிகளும் பயன்பெற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/CuaKjEL5EwcKdvxdZJbVoM

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

    slide image

    Comments

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *